அறிவொளி

ஆன்மிகத் திருவுருவம் திரு பாபுஜி மகராஜை சந்திப்பதற்கு முன்பு ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மாலைப் பொழுதில்ட எண்ணங்களற்ற மேல் நிலையை அவர் நோக்கியிருந்தார். திடீரென வானத்தில் ஒரு பேரொளி தோன்றியது. அது பின்பு பகவான் இராமனாக உருவெடுத்தது. பின்பு சிறிது நேரம் கழித்து அது கிருஸ்ணனாகவும் பின்பு ஓம் என்ற வடிவிலும் தோற்றமளித்தது. அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பிரகாசிக்கக்கூடிய அழகான ஆன்மீக திரு உருவத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு தோற்றமாக அது மாறியது. அவர் அந்த தோற்றத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. அந்த தோற்றம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த தோற்றம் மறைந்து வானம் பழைய நிலைக்கு வந்தது. அதிலிருந்து அவர் அறியாமலேயே சகோதரி கஸ்தூரி அத்தகைய ஆன்மீகப் பேரொளி தோற்றத்தையே அவரது உள்ளமானது தேடத் தொடங்கியது.

இரவில் அவர் ஒரு கனவு கண்டாள். அவரும்; அவரது குடும்பத்தினரும் காளி கோயிலின் பிரதான நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தனர். ஆந்த கதவின் படியில் ஒரு அழகான ஆன்மீக உருவம் அமைதியுடன் நின்று கொண்டிருந்தது. அந்த உருவமானது ஒரு வாளை சகோதரியின் கையில் கொடுத்து அந்த வாளின் மூலமாக அவரது தலையை வெட்டி அதனிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதுவே அந்த கோயிலில் நுழைவதற்கு நிபந்தனையாக இருந்தது. அவர் சிறிதும் யோசிக்காமல் அந்த விநாடியே தன் தலையை வெட்டி அந்த ஆன்மீக பேரொளி உருவத்திடம் கொடுத்து விட்டு கோயிலுக்குள் நுழைந்தார். ஆனால் கோயிலில் எந்த விக்கிரகமும் இல்லை. அங்கு அமைதியான சூழல் நிலவியது. அவரது நிலையும் ஆன்மிகத்தன்மைமயமானது. அந்த கனவு முடிவடைந்தது. ஆனால் அவர் விழிப்படைந்த பின்பும் அந்த காட்சியிலேயே மூழ்கியிருந்தார்.