சகோதிரி கஸ்தூரி

சகோதரி கஸ்தூரி இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கெரி மாவட்டத்தில் லெகிம்பூரில் மகாராஜா நகரில் பிறந்தார். ஆங்கில வருடப்படி 26ம் தேதி செப்டம்பர் மாதம் 1926ம் ஆண்டு ஆகும். அது கிருஸ்ணபட்சம் அஸ்வினி மாதம் 7வது நாள் சப்தமியாகும். அவரது தாத்தா பண்டிட் ஜெகந்நாத் பிரசாத் போலீஸ் சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றினார். அவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். முதலாவது மகன் பண்டிட் ராம்தாஸ் சதுர்வேதி 2வது மகன் பண்டிட் எம்.எல்.சதுர்வேதி 3வது மகன் பண்டிட் தயானந் சதுர்வேதி. திரு எம. எல். சதுர்வேதி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார். திரு தயானந் சதுர்வேதி அலிகாரில் வக்கீலாக பணியாற்றினார். பண்டிட் ராம்தாஸ் சதுர்வேதி வக்கீலாக பணியாற்றினார். அவருக்கு 5 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர். சகோதரி கஸ்தூரி 3வது மகளாகும். அவளது தாயார் பெயர் பகவதிதேவி. ஆவள் நேர்மையுடனும் நீதியுடனும் பக்தியுடனும் கூடிய குடும்பத் தலைவியாக இருந்தார்.

1960 வரை சகோதரி கஸ்தூரியின் குடும்பம் உத்திரப்பிரதேசத்திலுள்ள லெகிம்பூரில் இருந்தது. அதன் பின்னர் அவரது மூத்த சகோதரர் உடன் 1965 வரை பேர்லியில் இருந்தது. அவரது தகப்பனார் 22ம் தேதி ஜீன் மாதம் 1965ம் வருடம் பேர்லியில் காலமானார். அதற்குப் பிறகு 1975 வரை மோடி நகரிலுள்ள அவரது இளைய சகோதரருடன் அவரது குடும்பம் இருந்தது. அதற்குப் பிறகு லக்னோவிற்கு மாற்றப்பட்டது. அங்கு அவரது தாயார் 1978ல் காலமானார். லக்னோவில் ஒரு வீடு வாங்கப்பட்டது. அங்கு சகோதரி தனது இளைய சகோதரி இளைய சகோதரருடன் 2012 வரை தங்கியிருந்தார். அவர் 22ம் தேதி பிப்ரவரி மாதம் 2012ம் ஆண்டு லக்னோவில் மகா சமாதி அடைந்தார்.