சகோதிரி கஸ்தூரி

பெகன்ஜியைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாறு

அவரது ஞான குரு திரு பாபுஜி மகராஜ் சொல்லியபடி பெகன்ஜி அவர்களது சொந்த வாழ்க்கை வரலாற்றை தானே எழுதி புனிதமான தனது குருவின் காலடித்தாமரையில் சமரப்பித்தார். அவர் பணிவுடன் சமர்ப்பிப்பது என்னவெனில் தனது ஞான குரு பாபுஜி மகராஜை சந்தித்த பின்னர்தான் தனது உண்மையான வாழ்க்கை தொடங்கியது என்றும் எனவே தனது வாழ்க்கை வரலாறானது ஒன்றும் முக்கியம் வாய்ந்ததில்லை என்றும் கூறினார். அவள் எழுதிய நாட்குறிப்பின்படியும் திரு பாபுஜி மகராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் அடிப்படையிலும் அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு பணிவான முயற்சியின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.

சகோதரி கஸ்தூரி இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கெரி மாவட்டத்தில் லெகிம்பூரில் மகாராஜா நகரில் பிறந்தார். ஆங்கில வருடப்படி 26ம் தேதி செப்டம்பர் மாதம் 1926ம் ஆண்டு ஆகும். அது கிருஸ்ணபட்சம் அஸ்வினி மாதம் 7வது நாள் சப்தமியாகும். அவரது தாத்தா பண்டிட் ஜெகந்நாத் பிரசாத் போலீஸ் சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றினார். அவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். முதலாவது மகன் பண்டிட் ராம்தாஸ் சதுர்வேதி 2வது மகன் பண்டிட் எம்.எல்.சதுர்வேதி 3வது மகன் பண்டிட் தயானந் சதுர்வேதி. திரு எம.;எல். சதுர்வேதி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார். திரு தயானந் சதுர்வேதி அலிகாரில் வக்கீலாக பணியாற்றினார். பண்டிட் ராம்தாஸ் சதுர்வேதி வக்கீலாக பணியாற்றினார். அவருக்கு 5 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர். சகோதரி கஸ்தூரி 3வது மகளாகும். அவளது தாயார் பெயர் பகவதிதேவி. அவள் நேர்மையுடனும் நீதியுடனும் பக்தியுடனும் கூடிய குடும்பத் தலைவியாக இருந்தார்.

1960 வரை சகோதரி கஸ்தூரியின் குடும்பம் உத்திரப்பிரதேசத்திலுள்ள லெகிம்பூரில் இருந்தது. அதன் பின்னர் அவரது மூத்த சகோதரர் உடன் 1965 வரை பேர்லியில் இருந்தது. அவரது தகப்பனார் 22ம் தேதி ஜீன் மாதம் 1965ம் வருடம் பேர்லியில் காலமானார். அதற்குப் பிறகு 1975 வரை மோடி நகரிலுள்ள அவரது இளைய சகோதரருடன் அவரது குடும்பம் இருந்தது. அதற்குப் பிறகு லக்னோவிற்கு மாற்றப்பட்டது. அங்கு அவரது தாயார் 1978ல் காலமானார். லக்னோவில் ஒரு வீடு வாங்கப்பட்டது. அங்கு சகோதரி தனது இளைய சகோதரி இளைய சகோதரருடன் 2012 வரை தங்கியிருந்தார். அவர் 22ம் தேதி பிப்ரவரி மாதம் 2012ம் ஆண்டு லக்னோவில் மகா சமாதி அடைந்தார்.

பெகன்ஜியின் தகப்பனார் ஒரு மத நம்பிக்கையுடையவர். மொத்தத்தில் குடும்பத்தில் அனைவரும் மத நம்பிக்கை உடையவர்கள். முனிவர்களும் சந்நியாசிகளும் அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வருகை தந்தனர். சகோதரி கஸ்தூரியின் தகப்பனார் சத்சங்கத்தில் ஆர்வமுடன் கலந்து கொள்வார். அவர் ஒரு தத்துவவாதியாகவும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவராகவும் இருந்தார். அவர் பல மாணவர்களுக்கு துணிமணி பள்ளிக்கட்டணம் புஸ்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவார். ஓட்டு மொத்த குடும்பத்தினரும் பாடுவதிலும் எழுவதிலும் இசையிலும் வல்லவர்களாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.

அவரது குடும்ப அங்கத்தினர்கள் பொதுவாக பஜனை பாடுவதிலும் கீர்த்தனைகளை வாசிப்பதிலும் வல்லவர்களாககூம் ஒவ்வோரு மாலைப் பொழுதிலும் கூடிப் பாடுபவர்களாகவும் இருந்தனர்.

1945ல் அவர் தனது உயர்நிலைப் படிப்பை முடித்து விட்டாள். சகோதரி கஸ்தூரி இளமைப்பிராயத்திலிருந்தே அன்பும் அமைதியும் ஆன்மீகப் பண்புகள் கொண்டவளாகவும் இருந்தார்.

ஆன்மிகத் திருவுருவம் திரு பாபுஜி மகராஜை சந்திப்பதற்கு முன்பு ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மாலைப் பொழுதில்ட எண்ணங்களற்ற மேல் நிலையை அவர் நோக்கியிருந்தார். திடீரென வானத்தில் ஒரு பேரொளி தோன்றியது. அது பின்பு பகவான் இராமனாக உருவெடுத்தது. பின்பு சிறிது நேரம் கழித்து அது கிருஸ்ணனாகவும் பின்பு ஓம் என்ற வடிவிலும் தோற்றமளித்தது. அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பிரகாசிக்கக்கூடிய அழகான ஆன்மீக திரு உருவத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு தோற்றமாக அது மாறியது. அவர் அந்த தோற்றத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. அந்த தோற்றம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த தோற்றம் மறைந்து வானம் பழைய நிலைக்கு வந்தது. அதிலிருந்து அவர் அறியாமலேயே சகோதரி கஸ்தூரி அத்தகைய ஆன்மீகப் பேரொளி தோற்றத்தையே அவரது உள்ளமானது தேடத் தொடங்கியது.

இரவில் அவர் ஒரு கனவு கண்டாள். அவரும் அவரது குடும்பத்தினரும் காளி கோயிலின் பிரதான நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தனர். அந்த கதவின் படியில் ஒரு அழகான ஆன்மீக உருவம் அமைதியுடன் நின்று கொண்டிருந்தது. அந்த உருவமானது ஒரு வாளை சகோதரியின் கையில் கொடுத்து அந்த வாளின் மூலமாக அவரது தலையை வெட்டி அதனிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதுவே அந்த கோயிலில் நுழைவதற்கு நிபந்தனையாக இருந்தது. அவர் சிறிதும் யோசிக்காமல் அந்த விநாடியே தன் தலையை வெட்டி அந்த ஆன்மீக பேரொளி உருவத்திடம் கொடுத்து விட்டு கோயிலுக்குள் நுழைந்தார். ஆனால் கோயிலில் எந்த விக்கிரகமும் இல்லை. அங்கு அமைதியான சூழல் நிலவியது. அவரது நிலையும் ஆன்மிகத்தன்மைமயமானது. அந்த கனவு முடிவடைந்தது. ஆனால் அவர் விழிப்படைந்த பின்பும் அந்த காட்சியிலேயே மூழ்கியிருந்தார்..

அந்த மாலை நேரம் அதாவது 3ம் தேதி ஜனவரி மாதம் 1948ம் ஆண்டு அவளுக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்து இருந்தது. திரு பாபுஜி மகராஜ் அவளது வீட்டிற்கு வருகை தந்தார். அவள் திரு பாபுஜி மகராஜை கண்டவுடன் ஆச்சரியத்தில் உறைந்து போனார். ஏனெனில் அதே உருவத்தைத்தான் அவர் ஏற்கனவே கண்டிருந்தார். மிகத் தகுதியான குருவைத் தேடும் படலம் திரு பாபுஜி மகராஜை கண்டவுடன் முடிவடைந்தது. ஓ பாபுஜி உங்களைக் காணத்தான் வெகு நாட்களாக காத்திருந்தேன் என அவர் விவரித்தார். ஆமாம் எனது மகளே நானும் வெகு நாட்களாக உன்னைத் தேடி வந்தேன். நீ இப்போது கிடைத்து விட்டாய்.இப்படியாக இருவரும் முதன் முறையாக சந்தித்தபோது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். பொதுவாக சீடன்தான் குருவைத்தேடிச் செல்வதுண்டு. சில நேரங்களில் தனது மிகச் சிறந்த சீடனைத் தேடி குருவும் சீடனின் இருப்பிடத்திற்கு வருவதுண்டு. இப்படியாக அவரது ஆன்மீகப் பயணம் தொடங்கியது. அவர் கடிதத்தின் வாயிலாக பாபுஜி மகராஜ்ஜூக்கு தனது அனுபவங்களை தெரிவிப்பதும் அதற்கு மறுமொழியாக பாபுஜி மகராஜ் ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டினார். திரு பாபுஜி மகராஜூவுக்கும் பெகன்ஜக்கும் ஏற்பட்ட இந்த கடிதத் தொடர்பானது மனித குலத்திற்கு ஒரு ஆன்மீக பொக்கிஷமாக புத்தக வடிவில் 5 பாகங்களாக வெளியிடப்பட்டது. அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளாள். அவளது அத்தனை வெளிப்பாடுகளும் திரு பாபுஜி மகராஜூடன் ஏற்பட்ட அனுபவங்களைச் சார்ந்ததாக மட்டுமே அமைந்தது.

திரு பாபுஜி மகராஜின் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது ஆன்மீகப் பயணமானது தொடர்ந்தது. இயற்கையின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை ஜீவிக்கவே திரு பாபுஜி மகராஜ் வானுலகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் என அவர் கூடிய விரைவிலேயே உணர்ந்து கொண்டார். 7ம் தேதி நவம்பர் மாதம் 1953ம் ஆண்டு சகோதரி கஸ்தூரி [Perceptor] வழி நடத்துபவராக திரு பாபுஜி மகராஜ் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் அவர் தனது பணியினை தொடர்ந்து செய்து முழுமையாக பாபுஜியிடம் தன்னை ஒப்படைத்தார். அவர் இயற்கை விதிகளான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு பாபுஜி மகராஜ் தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிரத்தையுடன் செய்து வந்தார்.

27ம் தேதி அக்டோபர் மாதம் 1953ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவளுக்கு ‘சந்நியாச தீட்சை’ [Saint Gati] மற்றவர்களிடம் அவள் ஒரு சந்நியாசி என அறிமுகப்படுத்தினார்.

29ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1955ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவருக்கு எழுதிய கடிதத்தில் ‘நீ என்னோடு லயமாகி விட்டாய்.இனிமேல் உனது பெற்றோர்களால் பெற்றெடுக்கப்பட்ட கஸ்தூரி நீ இல்லை என கூறினார்.

15ம் தேதி செப்டம்பர் மாதம் 1964ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவருக்கு கடிதம் எழுதினார். ஆதில் நீ கடவுளின் தன்மையை அடைந்து விட்டாய். 15ம் தேதி செப்டம்பர் மாதம் 1967ம் ஆண்டு அவர் மத்திய பகுதியில் [Centre region] நுழைந்தார். 28ம் தேதி ஜீன் மாதம் 1968ம் ஆண்டு அவர் எல்லையற்ற ஆனந்த நிலையை [Bliss] அடைந்தார். அவர் 2ம் தேதி மே மாதம் 1975ம் ஆண்டு பாபுஜிக்கு எழுதிய கடிதத்தில் எல்லையற்ற ஆனந்த சாகரத்தில் மூழ்குவதற்கு ஒருவர் என்னை தள்ளி விட்டார் என எழுதினார்.

பாபுஜி மகராஜ் சந்நியாசி கஸ்தூரியின் ஆன்மீக நிலையை ஆராய்ச்சி செய்தார். ஒரு தடவை அவர் அவரிடம் அவளது ஆன்மீக அனுபவங்களை இந்த மனித குலத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதிலிருந்து அவரது பேனா நிற்கவேயில்லை. எழுதிக் கொண்டே இருந்தது. தெய்வீக ஆற்றலான அவளது இனிமையான பாடல்களின் மூலம் மற்றவர்களுக்கு தெய்வீக நிலையையும் ஆற்றலையும் அது பாய்ச்சியது. அவரது பாடல்கள் இரண்டு பாகமாக ‘சத்திய கீதம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவரது கட்டுரைகள் எழுத்துக்கள் அத்தனையும் தொகுக்கப்பட்டு ‘அனுபவ சரிதை’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அப்பியாசிகளுக்கு வழி காட்டுவது மட்டுமின்றி கூடுதலாக புதிய Perceptor களை வழிகாட்டுபவர்களை விருப்பப்படும் அப்பியாசிகளுக்கு தயார் படுத்தினார்.

பாபுஜியின் திரு உருவமாக எப்போதும் நாம் பெகன்ஜயை உணர்கிறோம். இங்கே இருந்து கொண்டு அதாவது இந்த உலகில் உடல் ரீதியாக இருந்து கொண்டு அதே நேரத்தில் ஆன்மீக உத்திரவுகளை அனுபவப்பூர்வமாக பெற்று நமக்கு வழங்குபவராக பெகன்ஜி இருக்கிறார். எப்படி பாபுஜி மகராஜ் தனது குரு லாலாஜி மகராஜைப் போல வாழ்ந்தாரோ அதேப்போல் பெகன்ஜியும் தனது குரு பாபுஜி மகராஜைப் போலவே வாழ்ந்தார்.

அவர் தனது பாடல்களில் ஒன்றில் ஓ பாபுஜி யாரெல்லாம் உன்னை அணுகுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஆன்மீக பாதைக்கான வழித்தடத்தை பெறுகின்றனர்.

இன்னொரு பாடலில் அவளது மரமாகிய உடலிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு இலையும் பாபுஜி மகராஜின் பெயரைத் தாங்கியே நிற்கிறது.

இதுவே அவர் திரு பாபுஜி மகராஜ் மீத கொண்ட ஆன்மீக லயமாகும்.